திருவண்ணாமலை

சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்தார்.
கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று மாவட்ட கல்வித் துறை ஏற்கெனவே கடிதம் அனுப்பி உள்ளது.
இருப்பினும், திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் உள்ள சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்தவொரு பள்ளியிலும் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மீறி சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?: இதற்கிடையே, திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அனுப்பியுள்ள கடிதத்தில், உங்கள் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.
எனவே, உங்கள் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இது தனியார் பள்ளி நிர்வாகங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT