திருவண்ணாமலை

டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

DIN

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பாரிஜாதம் தலைமை வகித்தார்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள், பொதுமக்கள், உணவக சங்க நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, பொதுமக்கள், பயணிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
பொதுமக்களிடையே டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
நகராட்சி மகளிர் பள்ளியில்...: இதேபோல, திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டு டெங்கு கொசுவை ஒழிக்க உறுதிமொழி ஏற்றனர். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT