திருவண்ணாமலை

டெங்கு தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்

DIN

அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்யாறு கோட்ட அளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தின் போது செய்யாறு சுகாதார மாவட்டத்தில் சுகாதாரம், நகராட்சி, ஊராட்சி, கல்வித் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட துறைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
பின்னர், டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்திடவும், கிராமம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரத்தை பேணிக்காத்திட வேண்டும் என்றும், பொது மக்களிடையே சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தல், தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுதல் குறித்து தெரிவித்து ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் லோகநாயகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் பெ. கிருபானந்தம், கோட்ட ஊராட்சி உதவி இயக்குநர் ஹரிகரன், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கே.மணிவர்மா மற்றும் உள்ளாட்சி, நகராட்சி, சுகாதாரம், மருத்துவத் துறை கல்வித் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT