முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி கைலாய நாதர் கோயில் கும்பாபிஷேக விழா

ஆரணி கைலாயநாதர் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புதன்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:40 am IST
பகிர்:

ஆரணி கைலாயநாதர் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புதன்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது.
ஆரணியில் உள்ள அறம் வளர் நாயகி சமேத கைலாயநாதர் கோயில் திருப்பணி ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்து வியாழக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. 
முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு யாக சாலை பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
இதில் கோயில் சார்பில் அமைச்சருக்கு கும்ப மரியாதை செய்யப்பட்டது. பக்தர்கள் சங்கத் தலைவர் ஏ.பி.சுபாஷ்சந்திரபோஸ் அனைவரையும் வரவேற்றார். உடன் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், பக்தர்கள் சங்க பொருளாளர் வி.சம்பத், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றியச் செயலாளர் பி.ஆர்ஜி.சேகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.பி.இராதாகிருஷ்ணன், நகர நிர்வாகி பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், அகிலேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments