திமுக, கூட்டணிக் கட்சியினர் மறியல்: 500 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஆரணியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஆரணியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை ஆரணியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில் அண்ணா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக
எம்ஜிஆர் சிலை வரை சென்றனர்.
பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், திமுக எம்எல்ஏக்கள் கே.வி.சேகரன், அம்பேத்வளவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை, மதிமுக மாவட்டச் செயலாளர் டி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் ம.கு.பாஸ்கரன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.அப்பாசாமி, தமுமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீஸார் சுமார் 500 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.