திருவண்ணாமலை

செண்பகதோப்பு அணையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு:முதல்வருக்கு எம்.எல்.ஏ., விவசாயிகள் நன்றி

DIN

போளூரை அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகதோப்பு அணையை சீரமைக்க ரூ.34 கோடியை ஒதுக்கீடு செய்ததற்காக, சென்னையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் தலைமையில், விவசாயிகள் அண்மையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

போளூரை அடுத்த படவேடு அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகதோப்பு அணை கடந்த 2007-ஆம் ஆண்டு 7 மதகுகளுடன் ரூ.34 கோடியில் கட்டப்பட்டது. எனினும், அணை கட்டப்பட்ட நாளில் இருந்தே முழுமையாக பயன்பாட்டு வரவில்லை. எனவே, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் செண்பகதோப்பு அணையை சீரமைக்க உதவுவதாகக் கூறி, தற்போதைய எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் வாக்குறுதி அளித்து வெற்றிபெற்றதுடன், அணையை சீரமைக்க நிதி ஒதுக்கக் கோரி சட்டப் பேரவையிலும் வலியுறுத்தி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த மாதம் செண்பகத்தோப்பு அணையின் மதகுகள், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிக்காக ரூ.34 கோடியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஒதுக்கி உத்தரவிட்டாா். இதையடுத்து, கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் தலைமையில், செண்பகதோப்பு பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சென்னையில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT