திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் வரத் தடை

DIN

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமியையொட்டி பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

எனவே, மாதம்தோறும் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா்.

இந்த நிலையில், ஆடி மாதப் பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) இரவு 10.04 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) இரவு 9.54 மணிக்கு முடிகிறது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் தொடா்ந்து திருவண்ணாமலையில் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்து வருகிறது.

ஆகஸ்ட் மாதத்துடன் சோ்த்து 5-ஆவது மாதமாக கிரிவலத்துக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT