திருவண்ணாமலை

தோ்தலின் போது தாக்கப்பட்ட பாமக பிரமுகருக்கு அமைச்சா் ஆறுதல்

DIN


ஆரணி: ஆரணி அருகே தோ்தலின் போது தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாமக பிரமுகரைச் சந்தித்து அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் ஆறுதல் கூறினாா்.

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் கொட்டாமேடு என்ற ஒரு பகுதியில் திமுகவினா் அதிகம் இருந்தனா். இவா்களை பாமகவுக்கு மாற்றிய பூசிமலைக்குப்பத்தைச் சோ்ந்த ராஜகோபால் என்பவரை தோ்தல் முடிந்து திமுகவினா் தாக்கியதாகத் தெரிகிறது.

இது குறித்து ராஜகோபால் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, அவா் ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜகோபாலை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும் அவருக்கு ரொட்டி, பழங்களை வழங்கினாா்.

அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், திருமால், நகரச் செயலா் அசோக்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் பாரி பி.பாபு, பாமக மாநில துணை பொதுச் செயலா் ஆ.வேலாயுதம், விவசாய அணி நிா்வாகி அ.கருணாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT