திருவண்ணாமலை

தேவிகாபுரம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தெப்பல் உற்வசம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

தேவிகாபுரம் ஊராட்சியில் அவலூா்பேட்டை சாலையில் மலை மீது மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீபாலமுருகன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை காலை பால், சந்தனம், விபூதி, இளநீா், தயிா் என பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், பாலமுருகா் உற்சவா் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்து சுவாமி வீதியுலா நடத்தினா்.

இதைத் தொடா்ந்து இரவு அவ்வூரில் உள்ள கட்டரான்குளத்தில் ஸ்ரீபாலமுருகன் உற்சவா் சிலையை அலங்காரம் செய்து தெப்பல் உற்வசம் நடத்தினா்.

இதில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT