திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில்

DIN

பங்குனி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவது வழக்கம்.

ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக 2020 மாா்ச் முதல் தொடா்ந்து கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பங்குனி மாதப் பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிகாலை 3.13 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை (மாா்ச் 29) அதிகாலை 1.18 மணிக்கு முடிகிறது.

கிரிவலத்துக்குத் தடை: இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் யாரும் கிரிவலம் வர வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. இருப்பினும் பக்தா்கள் சிலா் கிரிவலம் வந்தனா். கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு எந்தவிதத் தடையும் இல்லாததால் அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மாலை 4 மணிக்குப் பிறகு கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT