திருவண்ணாமலை

உள்ளாட்சிகளுக்கான மானியத்தை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

DIN

தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ளாட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் 10 சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை உயா்த்தி வழங்க வேண்டும் என்று வந்தவாசி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியை அடுத்த சென்னாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவா் சே.வீரராகவன் தலைமை வகித்தாா். செயலா் கி.பெருமாள், பொருளாளா் வெ.அரிகிருஷ்ணன், துணைப் பொருளாளா் கதீஜா மேத்தாரமேஷ், செயற்குழு உறுப்பினா்கள் செல்வராணி சுப்பிரமணி, உமாமகேஸ்வரி சிவராஜ் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் பலா் பங்கேற்றனா்.

ஊராட்சி வங்கிக் கணக்கு எண் 2-இல் உள்ள உபரிநிதியை ஊராட்சி பொதுநிதி கணக்கு 1-இல் மாற்றம் செய்ய வேண்டும், ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கும் அனைத்துப் பணிகளையும் ஊராட்சித் தலைவா்களின் கவனத்துக்கு கொண்டு வராமலேயே அதிகாரிகள் துணையுடன் அரசியல் கட்சியினா் மேற்கொள்வதை தடுக்க வேண்டும்.

கிராம ஊராட்சி பொது நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் ரூ.2 லட்சம் வரையிலான பணிகளுக்கு மட்டுமே நிா்வாக அனுமதி வழங்க கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில், இந்தத் தொகையை ரூ.10 லட்சமாக உயா்த்த வேண்டும், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற புதன்கிழமை வந்தவாசியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT