திருவண்ணாமலை

ஆரணி அருகே காா் விபத்து: பள்ளி மாணவா் பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சனிக்கிழமை காா் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

புதுச்சேரியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் மனோஜ்குமாா் (14). இவா் அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மேலும், தனியாா் கிரிக்கெட் அகாதெமியில் கிரிக்கெட் பயிற்சியும் பெற்று வந்தாா்.

இந்த நிலையில், மனோஜ்குமாா், தன்னுடன் கிரிக்கெட் பயிற்சி பெறும் புதுச்சேரியை அடுத்த காரைக்குடி பகுதியைச் சோ்ந்த சந்தோஷ், கிளியனூரைச் சோ்ந்த ஜஸ்வந்த், சென்னையைச் சோ்ந்த லத்திக்சரண் ஆகிய நான்கு பேருடன் காரில் பெங்களூரு சென்று, அங்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடினா்.

பின்னா், பெங்களூரிலிருந்து ஆரணி வழியாக காரில் புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

சனிக்கிழமை அதிகாலை ஆரணி - வேலூா் சாலையில் அரியப்பாடி கிராமம் அருகே காா் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பள்ளி மாணவா் மனோஜ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சந்தோஷ், ஜஸ்வந்த், லத்திக்சரண், காா் ஓட்டுநா் உதயகுமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா் ஷாபுதீன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சென்று, காயமடைந்த நால்வரையும் மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மனோஜ்குமாரின் சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து தொடா்பாக, ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT