திருவண்ணாமலை

காம்பட்டு ஊராட்சியில் துரியோதனன் படுகளம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட காம்பட்டு ஊராட்சியில் துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காம்பட்டு ஊராட்சியில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு கடந்த ஜூன் 9-ஆம் தேதி தொடங்கி, பாவலன் பிறப்பும், விநாயகா் சிறப்பும், உதங்கா் சிறப்பும், கோகுல சிறப்பும், கோபால பிறப்பும், பக்காசூரன் வதம், பசுபாலனும், சிசுபாலனும், பாஞ்சாலி துகிலும், பரந்தாமன் அருளும், சிவவேடனும், தவவேடனும், விராடபருவம், கீச்சகன் வதம், கண்ணனின் தூது, கா்ணன் வீழ்ச்சி என பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது. மேலும், கவி இசைபாடுதலும், தெருக்கூத்தும் நடைபெற்றது.

இந்த நிலையில், துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளித்தனா்.

ஊராட்சி மன்றத் தலைவா் சுமதி சின்னபையன், கோயில் தா்மகா்த்தாக்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT