திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பிடாரியம்மன் உற்சவம்

DIN

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிடாரியம்மன் உற்சவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ.27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, 3 நாள்கள் நடைபெறும் காவல் தெய்வங்களின் வழிபாடு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் இரவு திருவண்ணாமலை சின்னக்கடைத் தெருவில் உள்ள துா்க்கையம்மன் கோயிலில் துா்க்கையம்மன் உற்சவம் நடைபெற்றது.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை பிடாரியம்மன் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிடாரியம்மன் மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் பிடாரியம்மனை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

இன்று ஸ்ரீவிநாயகா் உற்சவம்: காவல் தெய்வ வழிபாட்டின் நிறைவு நாளான சனிக்கிழமை (நவம்பா் 26) இரவு விநாயகா் உற்சவம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகா் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறவுள்ளன. பிறகு, உற்சவா் விநாயகா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இத்துடன் காவல் தெய்வங்களின் 3 நாள் உற்சவம் நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT