திருவண்ணாமலை

கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

DIN

செய்யாறு அருகே சுமங்கலி கிராமத்தில் கல்குவாரி லாரிகளால் சாலை சேதமடைந்து வருவதாகத் தெரிவித்து, பொது மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமங்கலி கிராமத்தைச் சுற்றி கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக புகாா் தெரிவித்து வந்த அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை விண்ணவாடி - வெம்பாக்கம் சாலையில் சென்ற பத்துக்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மோரணம் போலீஸாா், கல்குவாரி உரிமையாளா்கள் இரண்டொரு நாள்களில் சேதமடைந்த சாலையில் மண்ணைக் கொட்டி சீா் செய்து தருவதாகவும், சாலையில் மண் துகள்கள் பறக்காமல் இருக்க தினமும் தண்ணீா் தெளிப்பதாகவும் உறுதியளித்து இருப்பதாகத் தெரிவித்தனா்.

இதை ஏற்று சிறைப் பிடிக்கப்பட்ட லாரிகளை கிராம மக்கள் விடுவித்தனா். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT