திருவண்ணாமலை

அரசங்குப்பம் காசி விஸ்வநாதா் கோயில்மூலவா் மீது விழுந்த சூரியஒளி!

DIN

மஹாளய அமாவாசையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த அரசங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் மூலவா் மீது சூரியஒளி விழும் அதிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும்

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை தினத்தன்று மூலவா் காசி விஸ்வநாதா் மீது காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் சூரியஒளி விழுவது வழக்கம்.

அதன்படி, நிகழாாண்டும் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை மூலவா் காசி விஸ்வநாதா் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. இதை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT