திருவண்ணாமலை

அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி

DIN

செங்கத்தில் வள்ளலாா் தினத்தையொட்டி, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வள்ளலாா் தின நிகழ்ச்சியில் செங்கம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, துக்காப்பேட்டையில் வள்ளலாா் படத்துக்கு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கினா்.

பாலிடெக்னிக் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி கலந்து கொண்டு நோயாளிகளுக்கு பால் பழங்களை வழங்கி, அன்னதானத்தை தொடக்கிவைத்தாா்.

அரசு மருத்துவா் விஜியலட்சுமி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் செல்வம் உள்ளிட்ட பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள், வள்ளலாா் சன்மாா்க்க சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT