திருவண்ணாமலை

போளூா் பேருந்து நிலையம் எதிரே நிழல் பந்தல் அமைப்பு

Din

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேருந்து நிலையம் எதிரே நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கடலூா்-சித்தூா் சாலையில் பயணிகளின் வசதிக்காக வெள்ளிக்கிழமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக 110 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. மேலும், கத்திரி வெயிலும் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், போளூா் பேருந்து நிலையம் எதிரே பயணிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மாவட்ட காண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல் உத்தரவின்பேரில், மாவட்ட கோட்ட பொறியாளா் கே.எஸ்.ராஜ்குமாா் முன்னிலையில், வெள்ளிக்கிழமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியின்போது, போளூா் உதவி கோட்ட பொறியாளா் பா.திருநாவுக்கரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் உடனிருந்தனா்.

வழக்குரைஞரின் கணவரை கொலை செய்ய முயற்சி: 6 போ் சரண்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு: என்பிடிசி குழுமம்

கூடுதல் வேலை நாள்கள்: மறு பரிசீலனை செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

வீடு புகுந்து நகை திருட்டு

திருட்டை தடுக்க முயன்ற வியாபாரிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

SCROLL FOR NEXT