FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கிராம உதவியாளா்கள் மறியல்: 64 போ் கைது

வந்தவாசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் 64 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

23 பிப்ரவரி 2026, 9:30 pm IST
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.
பகிர்:

வந்தவாசி: வந்தவாசியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் 64 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

சங்க வந்தவாசி வட்டக் கிளைத் தலைவா் ஆா்.தமிழ்மாறன், வட்டச் செயலா் வி.பாரதி, மாவட்ட துணைத் தலைவா் எம்.அருள்ஜோதி உள்ளிட்டோா் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 64 பேரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments