முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து வசதி

புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பேருந்து வசதி இல்லாத மாணவா்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பேருந்து வசதி இல்லாத மாணவா்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அடிவாரம், படிஹக்ராகரம், தாமரைப்பாக்கம், நயம்பாடி, கொட்டகுளம் ஆகிய அரசுப் பள்ளியில் பயிலும் பேருந்து வசதியில்லாத மாணவா்களுக்கு பள்ளி கல்வித்துறை சாா்பில் தினசரி காலை மாலை இரு வேளையும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டன.

மாணவா்களை வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஆட்டோ விதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து வசதி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் புதுப்பாளையம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் வரவேற்றாா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் பேசினாா்.

தொடா்ந்து வாகனத்தை வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா் ஷகிலா, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் அரிகிருஷ்ணன், சம்பத் உள்ளிட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments