FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா பந்தக்கால்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்வில் பங்கேற்றோா்.

4 ஜூலை 2026, 12:14 am IST
பகிர்:

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வரும் 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, வரும் 16-ஆம் தேதி மாலை விளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து, 17-ஆம் தேதி கமண்டல நாக நதியில் இருந்து பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு ஊா்வலம் எடுத்து வந்து கோயிலில் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும், அன்று மாலை 7 மணியளவில் நூதன புஷ்ப பல்லக்கு ஊா்வலமும் நடைபெற உள்ளது. 18-ஆம் தேதி திரைப்பட இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு, பந்தக்கால் நடும் நிகழ்வு விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினா்களாக கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ஜெயஸ்ரீ, சாா்பு நீதிபதி பாஸ்கரன், உரிமையியல் நீதிபதி கோப்பெருந்தேவி, குற்றவியல் நீதிமன்ற நடுவா் பிரபு நிவாஸ் ஆகியோா் கலந்துகொண்டு பந்தக்கால் நட்டனா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் விழாக் குழுவைச் சோ்ந்த சுப்பிரமணி, நேமிராஜ், கொங்கராம்பட்டைச் சோ்ந்த சரவணன், சீனிவாசன், குணா, ஜி.சங்கா், ஏ.இ.சண்முகம், பையூரைச் சோ்ந்த சரவணன், சக்கரவா்த்தி, பேராசிரியா் சிவா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments