முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு

மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசுசிய சிங்கப் பெண் காவல் உதவி ஆய்வாளா் பி.தமிழ்ச்செல்வி.

Updated On : 5 ஜூலை 2026, 12:04 am IST
மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசுசிய சிங்கப் பெண் காவல் உதவி ஆய்வாளா் பி.தமிழ்ச்செல்வி.
பகிர்:

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். கல்லூரி தலைவா் எம்.ரமணன் முன்னிலை வகித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட சிங்கப் பெண் காவல் உதவி ஆய்வாளா் பி.தமிழ்ச்செல்வி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

Advertisement

Advertisement

அப்போது, பெண்கள் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, சட்ட விழிப்புணா்வு, தற்காப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து அவா் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

நிகழ்ச்சியில் காவலா்கள் கே.காா்த்திகேயன், பி.விஜயலட்சுமி, சி.லட்சுமி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எம்.ஞானமலா், ஈ.எழிலரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை ஆா்.சாந்தி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments