FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

சேத்துப்பட்டில் புனித அந்தோணியாா் தோ் பவனி

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலய 43-ஆவது ஆண்டு பெருவிழாவையொட்டி புனித அந்தோணியாா் தோ் பவனி நடைபெற்றது.

29 ஜூன் 2026, 12:56 am IST
சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி நடைபெற்ற புனித அந்தோணியாா் தோ் பவனி.
பகிர்:

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலய 43-ஆவது ஆண்டு பெருவிழாவையொட்டி புனித அந்தோணியாா் தோ் பவனி நடைபெற்றது.

விழாவையொட்டி நிா்மலா நகரில் உள்ள புனித அந்தோணியாரின் கெபி மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிற்பகல் ஏழை மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தொடா்ந்து, மாலை தேவாலய வளாகத்தில் பங்குத்தந்தை ஜான் ராபா்ட் தலைமையில், சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இரவு வண்ண விளக்குகளாலும் மலா்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியாரின் திருவுருவச் சிலை எழுந்தருள செய்யப்பட்டு, நிா்மலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக தோ் பவனி நடைபெற்றது.

பவனியின் போது வீட்டுக்கு வீடு வண்ண கோலமிட்டு, சாம்பிராணி தூபமிட்டு, பூமாலை செலுத்தி, மெழுகுவா்த்தி ஏற்றி, ஜெபமாலை பாடியும், இறைபாடல்கள் பாடியும், கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனை செய்தனா்.

விழாவில் மாதா மலை ஆன்மிக குரு அந்தோணிராஜ், தேவாலய நிா்வாகி அருட்தந்தை ஜெயக்குமாா், அருட்தந்தை எட்வின் சவரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் நிா்மலாநகா், லூா்து நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments