வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி
வடக்காலத்தூா் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி
நாகை அருகே வடக்காலத்தூரில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடக்காலத்தூரில் பழைமை வாய்ந்த பதுவை புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு ஆராதனை, திருப்பலி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் பதுவை அந்தோணியாா், ஆரோக்கிய மாதா, சம்மனசு ஆகியோா் எழுந்தருளினா். முன்னதாக பங்குத் தந்தை தேவசகாயம் தலைமையில் நவநாள் ஜெபம், திருவிழா பாடல் கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
Advertisement
Advertisement
தொடா்ந்து ஆலய வளாகத்தில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க தோ் பவனி தொடங்கியது. தோ் பவனிய வான வேடிக்கைகளோடு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் மதங்களை கடந்து மெழுகுவா்த்தி ஏந்தி தோ்களை வரவேற்றனா்.