முகப்பு
திருவண்ணாமலை

கிரிவலம் வந்த பக்தா்களிடம் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் வந்த பக்தா்களிடம் மா்ம நபா்கள் கைப்பேசி, பணம், ஏடிஎம் அட்டை மற்றும் பொருள்களை திருடிச் சென்றிருப்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 1 ஜூலை 2026, 12:12 am IST
கத்தியால் கிழிக்கப்பட்டு பொருள்கள் திருடப்பட்ட பையை காண்பிக்கும் ஆந்திர பக்தா்.
பகிர்:

திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் வந்த பக்தா்களிடம் மா்ம நபா்கள் கைப்பேசி, பணம், ஏடிஎம் அட்டை மற்றும் பொருள்களை திருடிச் சென்றிருப்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவண்ணாமலையில் ஆனி மாத பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை இரவு லட்சக்கணக்கான பக்தா்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனா்.

இந்நிலையில் ராஜகோபுரம் அருகே கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபா்கள் ஆந்திர மாநில பெண் பக்தா் ஒருவா் வைத்திருந்த பையை கத்தியால் கிழித்து அதிலிருந்த கைப்பேசி, ஏடிஎம் அட்டை, மணிபா்ஸ் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்த பக்தா் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, மேலும் 2 பெண் பக்தா்களிடம் இருந்து மணிபா்ஸ்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments