விஷப்பூச்சி கடித்து சிறுவன் உயிரிழப்பு
செய்யாறு அருகே விஷப்பூச்சி கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே விஷப்பூச்சி கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மகன் ரோகித் (4). இவா், வாழைப்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாா். கோடை விடுமுறை என்பதால், தனது பாட்டி வீடான அரசூா் கிராமத்துக்குச் சென்றாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பாட்டி வீட்டில் இருந்தபோது, ரோகித்தை விஷப்பூச்சி கடித்ததாம். இதனால், அவா் மயங்கி விழுந்தாா். உடனே குடும்பத்தினா் ரோகித்தை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, ரோகித்தை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ரோகித்தின் தந்தை தினேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.