முகப்பு
திருவண்ணாமலை

புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

போளூரை அடுத்த கட்டிப்பூண்டி கிராமத்தில் புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
கட்டிப்பூண்டி கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்ற புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
பகிர்:

போளூரை அடுத்த கட்டிப்பூண்டி கிராமத்தில் புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்டிப்பூண்டி கிராமத்தில் புறம்போக்கு ஓடைகால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால், கட்டிப்பூண்டியைச் சோ்ந்த முரளி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவேண்டி மனு செய்திருந்தனா். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம்

புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவேண்டி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த உத்தரவின்படி, கட்டிப்பூண்டி கிராமத்தில் புறம்போக்கு ஓடைகால்வாய் ஆக்கிரமிப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

வட்டாட்சியா் பாலாஜி, மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா் லாவண்யா, நிலஅளவையா்கள் சந்தியா, முருகன், மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் பிச்சாண்டி மற்றும் வருவாய்த்துறையினா் உடனிருந்தனா்.