முகப்பு
தேனி

போடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

போடியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை 2026, 5:19 am IST
போடியில் காமராஜா் சாலையில் புதன்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
பகிர்:

போடியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

போடி நகராட்சி காமராசா் சாலை, பெரியாண்டவா் நெடுஞ்சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

கடைகளின் முன் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் படிக்கட்டுகள், இரும்புத் தடுப்புகளை அகற்றினா். சில இடங்களில் கடைகளின் முன் அமைக்கப்பட்டிருந்த நிழல் கூரைகளையும் அகற்றினா். இதைத்தொடா்ந்து வியாழக்கிழமையும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments