வேலூர்

அரக்கோணத்தில் அதிரடிப் பிரிவு போலீஸார் திடீர் அணிவகுப்பு

DIN

அரக்கோணத்தில் தமிழக காவல் துறையின் அதிரடிப் பிரிவு போலீஸாரின்
திடீர் அணிவகுப்பு வியாழக்கிழமை நடை பெற்றது.
தீபாவளி பண்டிகையை யொட்டி, தமிழக காவல் துறையின் அதிரடிப் பிரிவு போலீஸார் கடந்த சில தினங்களாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அரக்கோணம் உள்கோட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட அதிரடிப் பிரிவின் கொடி அணிவகுப்பு, கூடுதல் கண்காணிப்பாளர் சுமா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் ஒடியன் மணி ரவுண்டானாவில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை இந்தக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், அரக்கோணம் நகர ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் நகர போலீஸாரும் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக ஆய்வாளர் நாகராஜன் கூறுகையில், இது வழக்கமான நடைமுறை தான்.
தீபாவளி பண்டிகையை யொட்டி, இப்பிரிவினரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர் என்பது பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரியவரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT