வேலூர்

காவனூர் கிராமத்தில் போலி மருத்துவர் கைது

DIN

ஆற்காடு அருகே போலி மருத்துவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆற்காட்டை அடுத்த காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் பிளஸ் 2 படித்து விட்டு கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலின் பேரில் மாவட்ட மருத்துவ ஊரக நல இணை இயக்குநர் சாந்தி, மருந்துத் துறை ஆய்வாளர் மகாலட்சுமி, திமிரி போலீஸார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காவனூர் பகுதியில் விசாரணை நடத்தினர். இதில், இளங்கோவன் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து போலி மருத்துவர் இளங்கோவனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT