வேலூர்

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

DIN

குடியாத்தத்தில் பேருந்து மோதியதில் காயமடைந்தவருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
குடியாத்தம் செருவங்கி, நேருஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (32). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு மே மாதம் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். அப்போது, அரசுப் பேருந்து மோதியதில் பெருமாள் காயமடைந்தார். காயமடைந்த தனக்கு இழப்பீடு கோரி குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெருமாளுக்கு ரூ. 3.84 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 2016-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை பெருமாள் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தயாநிதி, வட்டியுடன் ரூ. 4.55 லட்சம் பெருமாளுக்கு வழங்க உத்தரவிட்டார். தவறினால் 2 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி குடியாத்தம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை சென்னை செல்லவிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT