வேலூர்

அரசுப் பள்ளியில் 11 கணினிகள் திருட்டு

DIN

குடியாத்தம் அருகே அரசுப் பள்ளியில் 11 புதிய கணினிகள், ஜெராக்ஸ் இயந்திரம், சிசிடிவி கேமரா ஆகியன திருடு போயின.
வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, கே.வி.குப்பம் தொகுதிக்கு உள்பட்ட காந்தி நகரில் உள்ள ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் 29, 30, 32 ஆகிய வார்டுகளுக்கான 3 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்தப் பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சிசிடிவி கேமராவை தேர்தல் அதிகாரிகள் சனிக்கிழமை பொருத்தினர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு வகுப்பறைக் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வைக்கப்பட்டிருந்த 11 புதிய கணினிகள், சிசிடிவி கேமரா, ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலபதி அளித்த புகாரின்பேரில் குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT