"திமுக ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை திட்டத்தில் ஆண்டு முழுவதும் வேலை'
திமுக ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் வேலை தரப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் வேலை தரப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம், மிட்டாளம் ஊராட்சிகளில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியது:
தற்போது கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டப்படி பணிகள் தொடர்ந்து வழங்கப்படுவதில்லை. மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலை என்பது ஆண்டு முழுவதும் வேலை வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக் கடன்கள் ரத்து செய்யப்படும். கைலாசகிரி பகுதியில் வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலின்போது எந்தக் கட்சி பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் சிந்தித்து வாக்களியுங்கள் என்றார் துரைமுருகன்.
கைலாசகிரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவில் இருந்து விலகிய 300 பேர் துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.