உ.பி.யில் அனுமன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
உத்தரப் பிரதேசத்தில் அனுமன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களால் பரபரப்பு நிலவியது.
உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் உள்ள கோயில் ஒன்றில் இருந்த அனுமன் சிலை, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ராம்பூர் பர்கோனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தரம்தாஸ்பூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சீத்லா மாதா கோயிலில் இருந்த அனுமன் சிலையை யாரோ சேதப்படுத்தியதாக சனிக்கிழமை காலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷப் ருன்வால் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கிராம மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதுதொடர்பாக தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சாதாரணமாகவும் அமைதியாகவும் இருப்பதாக ருன்வால் தெரிவித்துள்ளார்.
An idol of Lord Hanuman in a temple in Uttar Pradesh's Sonbhadra was allegedly vandalised by some unidentified miscreants, police said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.