குந்திச்சா கோயிலை நோக்கி திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்!
புரியில் நடைபெற்ற ரத யாத்திரையின் முதல் கட்டத்தின் நிறைவு தொடர்பாக..
புரியில் நடைபெற்றுவரும் ரத யாத்திரையின் முதல் கட்டத்தின் நிறைவாக, ஜெகந்நாதர் உள்பட மூவரின் ரதங்கள் குந்திச்சா கோயிலுக்குள் நுழையவுள்ள நிலையில் அங்குப் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.
ரத யாத்திரை தொடங்கிய மறுநாளான வெள்ளிக்கிழமை மதியம், மூன்று தெய்வங்களின் தேர்களும் ஸ்ரீ குந்திச்சா கோயிலை அடைந்தன. மரபுப்படி மூன்று சிலைகளும் இரவு முழுவதும் தேர்களிலேயே வைக்கப்பட்டிருந்தன.
இதனைத்தொடர்ந்து "அடாபா பிஜே" என்ற சடங்கு நடைபெறும். இந்த சடங்கின் முக்கியத்துவமாக பகவான் ஜெகந்நாதர், பலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட மரச்சிலைகளை ரதங்களிலிருந்து இறக்கி அடாபா மண்டபத்தில் வைக்கப்படும்.
Advertisement
Advertisement
மூன்று தெய்வங்களையும் திரும்பி தேரோட்டத்திற்குக் கொண்டுவரும் விழாவான பஹுடா யாத்திரை ஜூலை 24-ம் தேதி நடைபெறும்.
கடற்கரை நகரமான புரிக்கு பக்தர்கள் பெருமளவில் வந்ததால் அங்குள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேவேளையில், கனமழையால் தேங்கியிருந்த நீர் மக்களின் சிரமத்தை மேலும் அதிகரித்தது.
கூடுதல் காவல்துறை இயக்குநர் சௌமேந்திர பிரியதர்ஷினி கூறுகையில்,
வெள்ளிக்கிழமை இரவு முதலே காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
புவனேஸ்வரிலிருந்து புரிக்கு மக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும் வகையில், போக்குவரத்து நிலை குறித்த தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
புவனேஸ்வரிலிருந்து புரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை-316-ல் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்களின் நீண்ட வரிசை காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் வரை பயணிகள் தங்கள் பயணத்தை சில மணி நேரங்களுக்கு ஒத்திவைக்குமாறு புரியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை கேட்டுக்கொண்டது.
இதனிடையே புரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 86.6 மி.மீ மழைப் பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
Lord Jagannath and the sibling deities are set to enter the Gundicha temple on Saturday in a culmination of the first phase of Rath Yatra in Puri, which witnessed a massive influx of devotees for the "Adapa Bije" ritual regardless of the overnight downpour.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.