FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

லார்ட்ஸ் டெஸ்ட்: கிராந்தி கௌட் 5 விக்கெட்டுகள்; 170 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 11 ஜூலை 2026, 8:10 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கிராந்தி கௌட் - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 103 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 58 ரன்களும், தீப்தி சர்மா 57 ரன்களும் எடுத்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக எமி ஜோன்ஸ் 52 ரன்கள், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 44 ரன்கள், மையா பௌச்சியர் 23 ரன்கள், சோஃபி எக்கல்ஸ்டோன் 11 ரன்கள், மேடி வில்லியர்ஸ் 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் கிராந்தி கௌட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சயாலி சத்கரே மற்றும் ஸ்நே ராணா தலா இரண்டு விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி 115 ரன்கள் முன்னிலை பெற்றது. 115 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

summary

England were bowled out for 170 runs in their first innings of the ongoing Test match against India at Lord's.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments