லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
மூவர் அரைசதம்; 285 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழப்பு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 103 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 58 ரன்களும், தீப்தி சர்மா 57 ரன்களும் எடுத்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லாரென் ஃபைலர், இஸி வாங் மற்றும் மேடி வில்லியர்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லாரென் பெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 21 ரன்கள் எடுத்திருந்தது. மையா பௌச்சியர் 17 ரன்களுடனும், ஹீதர் நைட் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
Batting first in the Lord's Test match against England, the Indian team was bowled out for 285 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.