முகப்பு
கிரிக்கெட்

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 26 ஜூன் 2026, 9:30 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹமில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

டெவான் கான்வே, டாம் லாதம் அசத்தல்!

Advertisement

Advertisement

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டெவான் கான்வே மற்றும் டாம் லாதம் மிகவும் அற்புதமாக விளையாடினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்து அசத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் விளாசி அசத்தினர். டெவான் கான்வே 157 ரன்களும் (22 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) , கேப்டன் டாம் லாதம் 151 ரன்களும் (15 பவுண்டரிகள்) எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஹென்ரி நிக்கோல்ஸ் 36 ரன்கள், டாம் பிளெண்டல் 30 ரன்கள் மற்றும் வில்லியம் ஓ’ரூர்க் 19 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சோயப் பஷீர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி தற்போது அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

summary

Batting first in the third Test match against England, the New Zealand team was bowled out for 438 runs in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments