வேலூர்

பேருந்து விபத்து: 8 பேர் காயம்

DIN


மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து ஆம்பூர் அருகே சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு முனீஸ்வரன் நகரைச் சேர்ந்த பக்தர்கள் பேருந்து மூலம் மேல்மருவத்தூருக்குச் சென்றனர். பேருந்தை விஜி ஓட்டிச் சென்றார். 
ஆம்பூரை அடுத்த கீழ்முருங்கை கிராமம் அருகே சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செடிகளுக்கு தொழிலாளர்கள் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர். 
அப்போது பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது மோதியது. பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் ராஜசேகர் (40), சுமதி, பாக்கியலட்சுமி (60) பத்மா, துர்கா உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து 
விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT