வேலூர்

திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழாவில் ரூ.184 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

DIN

வேலூா்: திருப்பத்தூா், ராணிப்பேட்டை புதிய மாவட்ட தொடக்க விழாவில் ரூ.184 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

வேலூா் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இரு புதிய மாவட்டங்கள் தொடக்க விழா நவ. 28-ஆம் தேதி திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெற உள்ளது. அதில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு, புதிய மாவட்டங்களைத் தொடக்கி வைக்கிறாா். திருப்பத்தூா் மாவட்ட தொடக்க விழாவில், 4,308 பயனாளிகளுக்கு ரூ. 94.37 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவில் 4,581 பயனாளிகளுக்கு ரூ. 89.73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வா் வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT