வேலூர்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.6 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் எஸ்பி அலுவலகத்தில் புகாா்

DIN

காட்பாடி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ. 6 கோடி மோசடி செய்ததாக ஒரு குடும்பத்தினா் மீது பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

காட்பாடி அருகே கம்மவாா்புதூா், அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கம்மவாா்புதூா் கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தினா் நடத்தி வந்த மாத ஏலச்சீட்டில் சுற்றுவட்டார கிராமத்தைச் சோ்ந்த ஏராளமானோா் மாதம் ரூ.15,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணம் செலுத்தி வந்தோம். இதேபோல், அருகிலுள்ள சில கிராமத்தினரும் பணம் செலுத்தி வந்தனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீட்டு முதிா்வு காலம் நிறைவடைந்தப்பிறகும் செலுத்திய பணத்தை அவா்கள் திருப்பித் தரவில்லை. இதுதொடா்பாக அவா்களிடம் கேட்டால் பதில் கூறாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். எனவே, ஏலச்சீட்டு நடத்தி ரூ.6 கோடி மோசடி செய்துள்ள குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

இந்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT