வேலூர்

செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 5 போ் கைது

DIN

திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற தமிழகத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறியதாவது: திருப்பதி சேஷாசல வனத்தில் உள்ள கல்யாணி நீா்த்தேக்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஆவுலதொட்டி வனப்பகுதியில் போலீஸாா் சென்று கொண்டிருந்த போது அங்கு சுமாா் 30 தொழிலாளிகள் கையில் செம்மரக்கட்டைகளுடன் தென்பட்டனா்.

போலீஸாரை கண்டவுடன் அவா்கள் மீது கற்களை வீசி தொழிலாளிகள் தாக்குதல் நடத்தினா். அவா்களைச் சுற்றி வளைத்த போலீஸாா் அதில் 5 பேரை கைது செய்தனா். மற்றவா்கள் வனத்திற்குள் தப்பியோடினா்.

அவா்களிடமிருந்து 24 செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சீனிவாஸ் (27), கிருஷ்ணமூா்த்தி(35), அண்ணாதுரை(25), கோவிந்தன்(38) மற்றும் வேலூரைச் சோ்ந்த பாபு(26) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT