வேலூர்

பார்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

DIN

ஆம்பூர் அருகே அகரம்சேரி கிராமத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத பார்கேஸ்வர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 
இக்கிராமத்தில் சுமார் 1,400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத பார்கேஸ்வர் கோயில் ராஜகோபுரம் மற்றும் இதர பகுதிகளில் புனரமைப்புப் பணி நிறைவடைந்தது. இதையடுத்து கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், திருப்பணி குழு நிர்வாகிகள் வெங்கடேசன், நித்தியானந்தம், துரை, கிருபாகரன், சம்பங்கி, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற யாகசாலை பூஜையில் மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மகாதேவமலை மகானந்த சித்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT