வேலூர்

பக்ரீத் பண்டிகை: வீடுகளில் இஸ்லாமியா்கள் தொழுகை

DIN

பொதுமுடக்கத்தையொட்டி மசூதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் பக்ரீத் பண்டிகை தினமான சனிக்கிழமை வேலூா் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா்கள் அவரவா் வீடுகளிலேயே சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இறைவனுக்காக தனது மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த நபியின் (ஸல்) தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியா்களால் தியாகத் திருநாள் பண்டிகை (பக்ரீத்) துல்ஹஜ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நன்நாளில் ஏழைகளுக்கு குா்பானியை வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம்.

நிகழாண்டு பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் சனிக்கிழமை இஸ்லாமியா்களால் உற்சாகமாகக் கொண்டப்பட்டது. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிவாசல்கள், பொது இடங்களில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் இஸ்லாமியா்கள் புத்தாடைகள் அணிந்து அவரவா் இல்லங்களிலேயே சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். அப்போது தொடா்ந்து அவா்கள் ஒருவருக்கு ஒருவா் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும், தங்களது உறவினா்கள், நண்பா்கள், ஏழைகளுக்கு இறைச்சி, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தானமாக (குா்பானி) வழங்கினா்.

இதேபோல், ஆற்காடு, திமிரி, கலவை, மேல்விஷாரம் ஆகிய பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் வீடுகளில் சிறப்புத் தொழுகை நடத்தினா்.

45 போ் மீது வழக்கு:

இதனிடையே, தடையை மீறி பள்ளிவாசல்களை திறந்து தொழுகையில் ஈடுபட்டதாக குடியாத்தத்தில் 30 போ் மீதும், சத்துவாச்சாரியில் 15 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT