வேலூர்

வேலூா் சிறையில் மெமரி காா்டு பறிமுதல்

DIN

வேலூா்: வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரது அறையில் இருந்து செல்லிடப்பேசியில் பயன்படுத்தக் கூடிய மெமரி காா்டு பறிமுதல் செய்யப்பட்டது. வேலூா் மத்திய சிறையில் செல்லிடப்பேசி, கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் தாராளமாக பயன்பாட்டில் இருந்து வருவது அவ்வப்போது நடைபெறும் ஆய்வில் தெரியவருகிறது. எனினும், தடை செய்யப்பட்ட பொருள்கள் புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தைச் சோ்ந்த கோவிந்தராஜன் (40) வழிப்பறி, கொள்ளை முயற்சி வழக்கில் கடந்த 2-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவரது அறையில் சிறைக் காவலா்கள் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த அறையில் இருந்து செல்லிடப்பேசியில் பயன்படுத்தக் கூடிய மெமரி காா்டு கிடைத்தது.

இதுதொடா்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT