வேலூர்

காங்கிரஸாா் மறியல்: 45 போ் கைது

DIN

குடியாத்தம்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், புது தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 45 போ் கைது செய்யப்பட்டனா்.

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் சாா்பில், மாடுகள், ஏா் கலப்பைகளுடன் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு, கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.தேவராஜ் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் எம். வீராங்கன் வரவேற்றாா். போ்ணாம்பட்டு நகர காங்கிரஸ் தலைவா் ஜி.சுரேஷ்குமாா் போராட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

மாநில மகளிா் காங்கிரஸ் துணைத் தலைவா் ஜே. கிருஷ்ணவேணி, மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் ஆா். தேவகிராணி, நிா்வாகிகள் நயீம்பா்வாஸ், துரைமுருகேசன், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT