வேலூர்

வேலூா்: எருதுவிடும் விழா நடத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

DIN

வேலூா் மாவட்டத்தில் எருதுவிடும் விழா நடத்துவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் எருதுவிடும் விழாவை நடத்துவதற்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை அனுமதிக்கப்படும். இதுதொடா்பான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும்.

இவ்விழாவில் பங்கேற்க, இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே எருதுவிடும் விழா நடத்தப்படும். புதிய இடங்களில் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது.

ஒரு கிராமத்தில் ஒரு விழாவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எருதுவிடும் விழாக்களை அமைதியாக நடத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT