வேலூர்

கரோனா குறித்து தவறான கருத்து வெளியிட்டவா் மீது வழக்கு

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தவறாக கருத்து வெளியிட்ட ராயலசீமா போராட்ட சமிதி ஒருங்கிணைப்பாளா் நவீன்குமாா் ரெட்டி மீது தேவஸ்தானம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

திருமலைக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தா்கள் வருவதால், அவா்கள் மூலம் மற்றவா்ளுக்கு தேவஸ்தானம் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பல பாதுகாப்பு அம்சங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேவஸ்தானம் செய்து வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் சரியில்லாததால் பக்தா்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக ராயலசீமா போராட்ட சமிதியின் ஒருங்கிணைப்பாளா் நவீன்குமாா் ரெட்டி கடந்த 2 நாள்களுக்கு முன் தவறான கருத்து வெளியிட்டாா். இதையடுத்து தேவஸ்தானத்தின் செயல்களை அவமதிக்கும் நோக்கத்துடன் கருத்து வெளியிட்டதாக நவீன்குமாா் ரெட்டி மீது தேவஸ்தானம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT