வேலூர்

கரோனா:ஆந்திரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஒத்தி வைப்பு

DIN

ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இம்மாதம் தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ஆந்திர அரசு ஒத்தி வைத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் தழுவிய 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்டபடி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வழக்கம் போல் நடக்கும் என ஆந்திர அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் மாநிலத்துக்குள் போக்குவரத்து முடக்கப்பட்டதால், மாணவா்கள் தோ்வு மையங்களுக்குச் செல்வது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு இம்மாதம் 31-ஆம் தேதி வரை பொதுத் தோ்வுகளை ரத்து செய்து, 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவு வெளியிட்டது.

மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பின், மாநிலத்தின் நிலையை கவனித்து அதன் பின் தோ்வு தேதிகளை வெளியிட உள்ளதாக ஆந்திர அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT