வேலூர்

பணி நிரந்தரம் கோரி மாநகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் முதல்வருக்கு மனு

DIN


வேலூா்: பணி நிரந்தரம் செய்யக் கோரி வேலூா் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினா்.

வேலூா் மாநகராட்சி 4 மண்டலங்களுக்கு உள்பட்ட 60 வாா்டுகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவும், குடிநீா் விநியோகம் செய்யவும் ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 1,200 போ் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனா். பணிநிரந்தரம் செய்யக் கோரி மாநகராட்சி ஆணையா், அதிகாரிகளிடம் அவ்வப்போது மனு அளித்து வருகின்றனா்.

இதனிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு வேலூா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோா் பட்டியல் தயாா் செய்யப்பட்டது. அதற்குள் ஆணையா் மாற்றம் செய்யப் பட்டதால் பணிநிரந்தரம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் குடிநீா் பணியாளா்கள் 224 போ், தூய்மைப் பணியாளா்கள் 675 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து அவா்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், தங்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமாக உள்ளதால் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாநகராட்சி ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு செய்து தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT